வக்ஃப் வாரியங்களுக்கு கடுமையான கணக்கெடுப்பு மற்றும் நிதி நிலைமை வெளிப்படைத்தன்மை ஆகியன கட்டாயமாக்கப்படுகிறது. இதனால் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.CAG அல்லது மூன்றாவது தரப்பினரால் வழக்கமான ஆடிட் நடத்துவதன் மூலம் வக்ஃப் சொத்துக்களின் மேல் கண்காணிப்பு உறுதி செய்யப்படுகிறது மற்றும் மோசடி நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வழி காட்டுகிறது.கணினி மயமாக்கல் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் தெளிவான தகவல் பெறுதல் சிறப்பாக செயல்படுத்தப்படும். மேலும் வக்ஃப் சொத்துகளின் பதிவுகளை டிஜிட்டல் வடிவமாக மாற்ற வழிவகை செய்கிறது.
இதனால் வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் மறு பதிவு பயன்பாட்டைத் தடுப்பது சாத்தியமாகிறது. மேலும் இணையதளத்தில் வக்ஃப் சொத்துக்களின் தகவல்களை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளமுடியும்.இந்த சட்டம் வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரானது மற்றும் அதனைத் தடுக்கும் வகையில் வலிமையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதற்கான விரைவான நடவடிக்கை எடுக்க உரிமை வழங்குகிறது.வக்ஃப் சொத்துக்களின் மூலம் வருகின்ற வருமானத்தினை இன மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் பயன்படும் பொருட்டு கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறைகளில் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இந்த நடைமுறை வக்ஃபுக்களின் தானதர்ம நோக்குடன் பொருந்துகிறது.வக்ஃப் நிறுவன மேலாண்மை சீரமைப்பிற்கான தகுதி வாய்ந்த நபர்களை நியமிக்க புதிய நடைமுறைகளில் அரசியல் தலையீட்டை குறைத்தும், சீரான நிர்வாகத்தை உறுதி செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது.
தானம் செய்த நபர்களின் நோக்கத்திற்கு ஏற்ப வக்ஃப் சொத்துக்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வாரியத்தின் பொறுப்பை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் தானதர்ம நோக்கங்களை பாதுகாத்திட வகைசெய்கிறது.மேற்கண்ட வக்ஃபின் மத மற்றும் சமூக நம்பிக்கையை பாதுகாத்திட இந்த சட்டம் உதவுகிறது.