தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், ஆட்டிசம் குறித்து மக்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பல்வேறு அறிவுரைகள் விழிப்புணர்வுகள் கொண்டு வர வேண்டும் என்றார். இந்த நோய்க்கான முதல் கட்ட அறிகுறிகளை கண்டுபிடித்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை அளிக்கலாம் எனவும் அதனை பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மருதமலை கும்பாபிஷேகத்தை பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து துறை அலுவலர்களுடன் நேரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்கு செய்யப்பட வேண்டிய கட்டுப்பாட்டு வசதிகள், பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, வாகன நிறுத்தம் வசதிகள் ஆகியவை கண்காணிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும் அதிகளவிலான பக்தர்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் சுமூகமாக அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், வாகனங்கள் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

