திருநெல்வேலி, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட வழித்தடம் ஆகும்.மானூரிலிருந்து கடையநல்லூர் கடையநல்லூரில் இருந்து மானூர் ஆகிய ஊர்களுக்கு இருக்கும் இடையில் பல கிராமங்கள் பயன்படக்கூடிய வகையில் இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கினால் பொதுமக்களும் பயணிகளும் பயன்பெறுவர்.
ஆகையால் மேற்கண்ட வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அப்போது பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் காசி தர்மம் துரை, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சீனித்துரை, கடையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
