இதனால் அவர்கள் சிறுநீர் கூட கழிக்க முடியாமல் அவதி அடைந்து வந்தனர். பின்னர் காவல் துறை விசாரணை வருவதாக, கூறி உள்ளனர். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்தில் வந்து அவர்களை விடுவித்து விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை ஆதித்யா பஜாஜ் மேலாளர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வருமாறு காவல்துறை கூறி விட்டுச் சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.புதிய இருசக்கர வாகனம் ஏற்பட்ட பழுதை சரி செய்ய வாங்கிய சோர்வுக்கு சென்ற வாடிக்கையாளர்களை ஷோரூம் உள்ளே பூட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
கோவை:புதிய இருசக்கர வாகனம் பழுதை விசாரிக்க ஷோரூம் சென்ற வாடிக்கையாளர் : வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உள்ளே வைத்து பூட்டிய ஊழியர்கள் கதவைத் திறந்து விடுவித்த, காவல் துறையினர் விசாரணை!!!
April 29, 2025
0
கோவை, அத்திப்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஹரிகரன் மற்றும் சந்தோஷராஜ் இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஆதித்யா பஜாஜ் பல்சர் 220 புதிய வாகனம் மார்ச் 14 ஆம் தேதி வாங்கி உள்ளனர்.இந்த நிலையில் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் வாங்கிய இரு சக்கர வாகனம் பிரேக் சரியாக பிடிக்காததால் ஷோரூமில் வந்து புகார் கொடுத்து உள்ளனர். இதற்கு சரியான காரணம் தெரிவிக்காமல் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. இதனை அடுத்து ஹரிஹரன் மற்றும் சந்தோஷராஜ் ஆகிய இருவரையும் ஷோரூம் உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்று உள்ளனர்.