அந்தவகையில் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் பூமாலை கட்டும் தொழில் மூலம் பலர் பொருளாதாரம் ஈட்டி வருகின்றனர். அதுபோல் இங்குள்ள பூசந்தையில் இருந்து அநேக மகளிர் பூக்களை விலைக்கு வாங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதன் மூலமும் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு இதன்மூலம் கிடைக்கும் வருமானமே அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில் இவர்கள் விற்பனைக்கு கொண்டு செல்லும் பூக்கள் அளவு சிறிதாக இருந்தாலும் பேருந்தில் லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் பெரும்தொகையினை இதற்கென அவர்கள் செலவு செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
தமிழக முதல்வர் சுயஉதவிக்குழு மகளிர் அரசு பேருந்தில் கொண்டு செல்லும் 25 கிலோ வரையிலான சுமைகளை எந்தவித கட்டணமும் இன்றி கொண்டு செல்லலாம் என அறிவித்து உள்ளார். இதன்படி இச்சலுகையினை குமரி மாவட்டத்தில் பூ வியாபாரம் செய்யும் பெண்களுக்கும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.ஏற்கனவே கட்டணமில்லா பேருந்தால் இத்தகைய தொழிலில் ஈடுபடும் மகளிர் மிகுந்த பயன்பெற்று வரும் நிலையில் அவர்கள் கொண்டு செல்லும் பூக்களுக்கு சுமை கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிப்பதால் இத்தொழிலில் ஈடுபடும் மகளிர் பெரிதும் பயன்பெறுவர் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.அருள்ராஜ், செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் P.லெட்சுமி மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.