தென்காசி யானை பாலம் அருகிலுள்ள ஸ்ரீ பால விநாயகர் மற்றும் காவேரி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது!!!
April 07, 2025
0
தென்காசி யானை பாலம் அருகில் உள்ள ஸ்ரீ பால விநாயகர் மற்றும் ஸ்ரீ காவேரி அம்மன் ஆலயத்திற்கு இன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது அதற்கு முன் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தமிழகத்தில் ராமேஸ்வரம் குற்றாலம் திருச்செந்தூர் எப்படி பல சுற்றுலா தலங்கள் உள்ளன இதில் குறிப்பாக குற்றாலம் பகுதியில் யானை பாலம் அருகில் உள்ள சிற்றாறு நதி ஓரத்தில் ஸ்ரீ பால விநாயகர் மற்றும் காவேரி அம்மன் ஆலயம் உள்ளது இன்று இக்கோயிலில் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பெண்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட ஸ்ரீ பால விநாயகர் இன்று சிறிய கோயில் கட்டப்பட்டு அதில் வேத மந்திரங்களும் முழங்க கோபுர கலசங்களில் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன விழாவுக்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் கைலாஷ் அய்யர் குடும்பத்தினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்