தென்காசி:சுரண்டை ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் சித்திரை தேர் திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!!!
5/08/2025
0
சுரண்டை ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் சித்திரை தேர் திருவிழா சுரண்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம்தேதி அம்மனுக்கு பால் பன்னீர் திரவியம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கால்நாட்டு விழாவுடன் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது.தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இரவு 8 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நடந்தது. இதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை,பிரசாதம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடந்தது. முக்கிய நிகழ்வான ஒன்பதாம் திருநாள் நேற்று புதன்கிழமை 7ம்தேதி மாலை 4 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது.தேரில் ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.தேர் திருவிழாவில் சுரண்டை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை அனைத்து சமுதாய மண்டகப்படித்தார்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.