வேலூரில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நெடுஞ்சாலை துறை பணிகளை ஆய்வு செய்தார் தலைமை பொறியாளர்!!!
6/26/2025
0
வேலூரில் காங்கேயநல்லூர் சத்துவாச்சாரி இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மற்றும் கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையை காட்பாடி ரயில் நிலைய மேம்பாலத்திலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் நடைபெறும் சாலை அகலப்படுத்தும் பணி ஆகியவற்றை நெடுஞ்சாலை துறையின் தலைமை பொறியாளர் கே. ஜி.சத்யபிரகாஷ் நேரில் பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் கிருபானந்தன், உதவி பொறியாளர்கள் மற்றும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணி வேலூர் கோட்ட பொறியாளர் தனசேகரன், உதவி கோட்ட பொறியாளர் குமரேசன், இளநிலை பொறியாளர் மதனம் ஜாபர் மற்றும் பொறியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இப்படி நடந்து முடிந்த பணிகளின் மொத்த மதிப்பு ரூபாய் 14 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.