வேலூர்:முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு தொடக்கம்!!!
8/10/2025
0
வேலூர் ஓட்டேரி பகுதியில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கே முதுநிலை படிப்புகளில் உள்ள 240 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று 11ம் தேதி தொடங்குகிறது.இதில்சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இணையவழியில்விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். ஆதலால் இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த கலந்து கொண்டு பயனடையுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
