மதுரை:மேயர் இந்திராணி ராஜினாமா ஏற்பு ஐந்து நிமிடத்தில் முடிந்த மதுரை மாமன்ற கூட்டம்!!!

sen reporter
0

மதுரையில் உள்ள 2 அமைச்சர்களின் ஈகோவால் புதிய மேயரை தேர்வு செய்ய முடியவில்லை என அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.மேயராக இருந்துவந்த இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.மதுரை மாநகராட்சியில்வரிகள்நிர்ணயிப்பதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து, இன்று கூடிய அவசர சிறப்பு மாமன்ற கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.மாநகராட்சிஆணையாளர்சித்ராவிஜயன்,மாமன்றஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும்,அதிமுகபோராட்டத்தின் அடிப்படையில் இந்திராணி மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தார். அதிமுகவின் இந்த கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக, திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேயர் இந்திராணி ராஜினாமா தீர்மானம் முன்மொழியப்பட்டது. தீர்மானத்தை ஒருமனதாக ஏற்று மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனால் 10.30 மணிக்கு தொடங்கிய மாமன்ற கூட்டம் 10.35 மணி அளவில் வெறும்5நிமிடங்களில்நிறைவடைந்ததுஇதன் பிறகு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா அளித்த பேட்டியில், அதிமுக அழுத்தம் காரணமாக மண்டலத் தலைவர்கள், குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேயர் ராஜினாமா செய்ய வேண்டும்எனகோரிக்கைவிடுத்தோம்.மேயர் ராஜினாமா அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எடப்பாடி பழனிசாமி மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தார். புதிய மேயரை உடனே தேர்வு செய்ய வேண்டும். திமுக அரசின் கையாலாகாத தனத்தால் புதிய மேயரை இதுவரையில் தேர்வு செய்ய முடியவில்லை. மதுரையில் உள்ள 2 அமைச்சர்களின் ஈகோவால் புதிய மேயரை தேர்வு செய்ய முடியவில்லை" என்று கூறினார்.முன்னதாக, மதுரை மேயராக இருந்துவந்த இந்திராணி பொன் வசந்தின் கணவரும் கடந்த சில வாரங்களுக்குமுன்புகைதுசெய்யப்பட்டார். மேலும், முறைகேடு புகார் எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top