வேலூர்:காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!!
11/25/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் எருக்கம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் திலீப் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
