கோவை மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு!!!!
11/28/2025
0
அதிமுக கண்டன பாதகை கிழித்தெறிந்து, ஒருவருக்கு ஒருவர் பறித்துக் கொண்டு வாக்குவாதம் முழக்கம் எழுப்பியதால் பெரும் பரபரப்புமெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் கண்டனம்.கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது.கோவை , மதுரை மெட்ரோ திட்டம் புறக்கணிப்பு செய்த மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.அதிமுக கவுன்சிலர்களுக்கும் -திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம்மெட்ரோ திட்டத்தை தவறான தரவுகளை திமுக தாக்கல் செய்த காரணத்தினால் தான் மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக அதிமுக கவுன்சர்கள் குற்றச்சாட்டு.அதிமுக கண்டன பாதகை கிழித்தெறிந்து, ஒருவருக்கு ஒருவர் பறித்துக் கொண்டு வாக்குவாதம் முழக்கம் எழுப்புவதால் பெரும் பரபரப்பு.தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இரண்டு மாதங்களுக்கு மாமன்ற கூட்டத்திற்கு வர தடை சஸ்பென்ட்.கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி அறிவிப்பு.
