சென்னை:வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார் உதயநிதி ஸ்டாலினுக்கு பாடல் வெளியீடு!!!
11/25/2025
0
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுகவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார் என்ற பாடல்திமுகஇளைஞரணிசார்பில்இன்றுவெளியிடப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் எழுதியுள்ள, வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார் என்ற பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, பாடலை வெளியிட, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.இந்த பாடலை இசையமைப்பாளர் மாரி சக்தி இசையமைக்க, பிரபல பின்னணி பாடகர் மனோ பாடியுள்ளார்.இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நான் பல பணிகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று சொன்னார்கள். இதுதான் எனக்கு முதல் வேலை. வருங்கால தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய துணை முதல்வரின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இளைய சமுதாயத்தினர் தங்களது தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவு சார்ந்த கருத்துகளை இளைய சமுதாயத்தினர் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.நாம் ஜல்லிக்கட்டு காளையாக இருக்கப்போகிறோமா? இல்லை மழையில் முளைத்த காளானாக இருக்கப் போகிறோமா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.கடந்த தேர்தல்களின்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுகவிற்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். இளைய சமுதாயத்தை அழைத்து ஓரிடத்தில் அமர வைக்க அவர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.'ஏகே47' என்ற பவர்ஃபுல் மெஷின்கன்கள் உள்ளன. ஆனால், நமது இயக்கத்தில் புதிய ஆயுதம் வந்துள்ளது. இந்த ஆயுதம் கருத்துகளால் தாக்கக்கூடியது. நாம் எந்த மேடையில் எந்த கருத்தை பேச வேண்டும் என்பதை அறிந்தவர்கள். என்று பேசினார்.தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்துவரும் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 27-ம் தேதி தமது 49-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
