கோவையில் நாளை முதல் செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி !!!
12/10/2025
0
கோவையில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி பூங்காவை நாளைமுதல்பொதுமக்கள்பார்வையிடஅனுமதிக்கப்படுகிறது.கோவை, காந்திபுரத்தில் உள்ள சிறைத்துறை மைதானத்தில் ரூபாய் 208 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த பூங்காவினை கடந்த மாதம் 25 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து. செம்மொழி பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்று உள்ள செம்பக மரம், செம்மொழி வனம், நறுமண வனம், ஐந்திணை வனம், நலம் தரும் வளம், மலர் வனம், புதிர் வனம், நிழல் வனம், 1000 க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் கொண்ட ரோஜா தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கியூ ஆர் கோடு பயன்படுத்தும் இந்தத் தோட்டங்களில் உள்ள மரம் மற்றும் செடி வகைகளை பற்றி தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டு உள்ளது.இது தவிர பாரம்பரியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக 500 பேர் அமரக் கூடிய திறந்தவெளி அரங்கம், உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், மாற்றுத் திறனாளிகளுக்கு என பிரத்தேக விளையாட்டு பூங்கா, மேம்படுத்தப்பட்ட நடைபாதை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் இருக்கைகள், மேலும் செம்மொழிப் பூங்கா முழுவதும் இரவில் ஜொலிக்கும் வண்ண அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.கோவையில் செம்மொழி பூங்கா வியாழக்கிழமைமுதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி.நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10-வயதிற்குட்பட்டோர்) ரூ.5, நடைபாதை உபயோகிப்போருக்கு ஒரு நபருக்கு(மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ.25,000, குறும்பட ஒளிப்பதிவிற்கு மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ.2000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூங்காவானது காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
