வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் உலக எச்.ஐ.வி,& எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு CROSS (CSC)ஏழைகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் போர்வைகள் வழங்கும் விழா பேரணாம்பட்டு, வி.கே.சாலையில் உள்ள இயேசு நேசிக்கிறார் ஜெபக்குழு எழுப்புதல் ஜெப கூடாரத்தில், நடைப்பெற்றது. இந்த விழாவுக்கு தமிழக மக்கள் கட்சியின் நிறுவன தலைவர்.ஜி.டி.பூவரசன், தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு காவல் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலை வகித்தனர். CROSS (CSC) யை சேர்ந்த அடுக்கம்பாறை, எம்.பி.கண்ணன். வரவேற்புரையாற்றினார் . அரசு மருத்துவர் டாக்டர் ஜே பிரதாப் குமார் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் ஜெ பிரகாஷ் குமார் குடியாத்தம் அன்னை தொழிற்பயிற்சி நிலைய தாளாளர் மது இயேசு நேசிக்கிரா ஜெப குழு போதகர் கே. தினகரன் ஆகியோர்கள் உணவுப் பொருட்களையும், போர்வைகளையும் ஏழைகளுக்கும், சபை ஊழியர்களுக்கும் வழங்கினர். இந்த விழாவில் அருட்பெருஞ்ஜோதி அருவிகள் எஸ் .சுரேஷ்குமார், எம் ஜி ராம்குமார் மற்றும் வி பாபா ராஜேஷ் எம். வாசு கிராம உதவியாளர் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .ஞறறஇந்த விழாவுக்கு மக்கள் நல சேவ சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்கினர் முடிவில் அடுக்கம்பாறை பி.சி.ஓ. CROSS (CSC)ஆர்.ரவீந்திரன் நன்றி கூறினார்...
வேலூர்:பேரணாம்பட்டில் உணவு பொருட்கள் போர்வைகள்,வழங்கும் விழா ஜி.டி.பூவரசன் பங்கேற்பு!!!
12/18/2025
0
