கோவை:ரோபோட்டிக்ஸ் சிகிச்சையில் புதிய முயற்சி!!!

sen reporter
0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் மருத்துவ உபகரணத்தை கொண்டு டில்லியில் இருந்து கோவையில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உபகரணங்களால் மிக குறைந்த செலவில் அறுவை சிகிச்சைகள் செய்ய இயலும் என கோவை இந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்..மருத்துவ துறையில் நவீன தொழில் நுட்பங்களின் வரவு சிகிச்சை முறைகளை எளிதாக்கி வருவது ஒரு புறம் இருந்தாலும்,நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படு இந்நிலையில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப பட்ட அதி நவீன ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது..இதில்,சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் ராமலிங்கம் மற்றும் அவரது குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர்.மருத்துவ துறையில் தற்போது அதிநவீன ரோபோட்டிக்ஸ் சிகிச்சையில் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களே பெரும்பாலான மருத்துவமனைகளில் அதிகம் பயன்படுத்துவதாக தெரிவித்த அவர்,இதனால் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகம் செலவு செய்யப்படுவதாக தெரிவித்தார்.ஆனால் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் உபகரணங்களை கொண்டு இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டதாக கூறிய அவர்,குறிப்பாக நியூடெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் இருந்து சுமார் 2362 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவையில் உள்ள ஒரு நோயாளிக்கு ரோபோடிக்ஸ் வாயிலாக சிகிச்சை மேற்கொண்டதை சுட்டி காட்டினார்.மிக தொலைவில் இருந்து செய்த இந்த சிகிச்சை மருத்துவ உலகில் ஒரு சாதனை முயற்சியாக பார்க்கபடுவதாக அவர் தெரிவித்தார்..இதனால் இனி வரும் காலங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன தொழில் நுட்ப உபகரணங்களை பயன்படுத்தினால் மிக குறைந்த செலவில் அதி நவீன சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்..இந்த சந்திப்பின் போது எஸ்.எஸ்.இன்னோவேஷன்ஸ் இண்டர்நேஷனல் இன்க் இன் நிறுவனத்தின் தலைவர மருத்துவர் கதிர் ஸ்ரீவஸ்தவா உடனிருந்தார்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top