நாகர்கோவில் மாநகராட்சி உள்பட்ட 34 37 43 16 ஆகிய வார்டு பகுதிகளில் ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான சாலை மற்றும் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிகளை மாநகர மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பின்பு நாகர்கோவில் மாநகரத்தின் மேயராக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வக்கீல் மகேஷ் தேர்வு செய்யப்பட்டார் . அதன் பின் அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சியின் காரணமாக மாநகரத்தின் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மாநகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தால் பல சாலைகள் சிதைந்து போய் கிடந்தது. மேலும் அலங்கார கற்கள் பதித்த சாலைகளும் குண்டும் குழியுமாக கிடந்தன. . இதற்காக அவர் முதல் கட்டமாக அவர் ஒன்றாவது வார்டில் இருந்து 52 வது வார்டு வரை அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு பணிகள் மேற்கொண்டார் அதன் பின்பு அந்த பணிகளை துரிதப்படுத்தி எந்த எந்த வார்டுகளுக்கு எந்த பணிகள் உடனடிதேவை என்பதை ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார் .இதன் ஒரு பகுதியாக இன்று (26)16,34,37,43 ஆகிய வார்டு பகுதிகளில் சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இதன்படி 16 வது வார்டு ஹனிபா நகரில் தார்சாலை அமைக்கும் பணி 34வது வார்டு நேரு நகரில் காங்கிரீட் சாலை தட்டான்விளை அம்மன் கோவில் கழிவு நீர் ஓடை அமைத்தல் பூங்காச்சாலை மூன்றாவது குறுக்கு தெருவில் காங்கிரீட் சாலை பணி 37வது வார்டு மில்லினியம் நகரில் சாலை பணி 43-வது வார்டில் மறவன் குடியிருப்பு பாலம் முதல் மாடன் கோவில் வரை சாலை சீரமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார் .
இதில் 16வது வார்டுக்கு ரூ 12 லட்சமும் 34-வது வார்டுக்குரூ. 6.80 லட்சமும் 43 வது வார்டுக்கு ரூ.2.30 லட்சமும் 37 வது வார்டுக்கு ரூ. நான்கு லட்சமும் ஆக முப்பது லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில்மாமன்ற துணை மேயர் மேரி பிரென்சி லதா மாமன்ற உறுப்பினர்கள் ஜவகர் தினகரன் டி ஆர் செல்வம் விஜயன் அமல செல்வன் தங்க ராஜா ஸ்டாலின் பிரசாத் முன்னாள் கவுன்சிலர் கத்தறினாள் மற்றும் வழக்கறிஞர் சதாசிவம் அருள்செல்வின் வட்டசெயலாளர் ராமகிருஷ்ணன் சசி ராதாகிருஷ்ணன் மாவட்டவிவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகானந்தம் சுதன் இஜிந்தன் நாகராஜன் சிவ் வினு நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர் ..