கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கலையரங்கத்தில் விஷ்வா யுவாக் கேந்திரா அமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கிராம விவசாய மேம்பாடு சம்பந்தமான பயிற்சி முகாம் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில் ஐநா சபையின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஜெபமாலை , நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் லதா கலைவாணன், சிலுவை வஸ்தியான், மரிய ஸ்டீபன், இந்த அமைப்பின் நிர்வாகிகள் ரெஜிஸ் தாமஸ், அண்ணாதுரை, நாராயணன், ராதாகிருஷ்ணன், பெருமாள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.