தக்கலை அருகே கடத்தப்பட்ட குழந்தை நள்ளிரவுக்கு முன் மீட்கப்பட்டு போலீசார் சாதனை படைத்துள்ளனர். குழந்தை மீட்புக்கு பின் தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டினார் . /பெற்றோர் இடையே ஏற்பட்ட மன விலகல் காரணமாக. 3 வயது குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்துகடத்தப்பட்ட வழக்கில் தனிபடையினர் குழந்தையை மீட்டுள்ளனர். தலைமறைவான குழந்தையின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். .
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் விபின்பிரியன் இவர் தக்கலை அருகே உள்ள பிலாவிளை பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார் .இவர்களுக்கு ஆதிக் என்ற 3 வயதுகுழந்தை உள்ளது .இந்நிலையில் கணவன் மனைவி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவனைப் பிரிந்து தனது தந்தை வீடான பிலாவிளையில் தற்போது வசித்து வருகிறார் பிரியா தனது மகனை தக்கலை அருகே. மேக்கா மண்டபம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ளார் வழக்கம் போல் குழந்தை ஆதிக் பள்ளி வாகனத்தில் நேற்று (27)காலை சென்றுள்ளார்.
பள்ளி வாகனம் தக்கலை அடுத்துள்ள சாமி விளை பகுதியில் செல்லும் போது இரண்டு வானத்தில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் பள்ளி வாகனத்தை வழி மறைத்து குழந்தை ஆதிக்கை கடத்தி சென்றுள்ளனர் .இது தொடர்பாக பள்ளி வாகன ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். குழந்தையை மீட்க தனிபடை அமைக்கப்பட்டு தேடல் வேட்டை நடந்தது. போலீசார் விபினின் தொலைபேசி எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடமான ஈத்தாமொழியில் தேடுதலை மேற்கொண்டதை அறிந்த கடத்தல் கும்பல் குழந்தை ஆதிக்கை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். தலைமறைவான விபின் மற்றும் கூட்டாளிகளான 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.