குடிபழக்கத்தால் திருமணமான ஆறு மாதத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக மணைவி காவல்துறையில் புகார் செய்துள்ளார். குமரி மாவட்டம் புத்தளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகன் சிவபாலன் (24). இவருக்கும் பறக்கை தெற்குபுளியன்குளத்தை சேர்ந்த சிவப்ரியா(20) க்கும் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்தது.
சிவபாலன் கொத்தனார் வேலைப்பார்த்து வருகிறார். குடிபழக்கம் உள்ளதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வேதனை அடைந்த அவர் சம்பவதன்று தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துஉள்ளார். இது தொடர்பாக மனைவி சிவப்ரியா கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.