தேனி மாவட்டம் சின்னமனூரில் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே சாலையின் ஓரத்தில் மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட நிரவாகத்தினர் வெட்டப்பட்ட நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதி அடைகின்றனர்.மேலும் சாலையில் கிடக்கும் இந்த வெட்டப்பட்ட மரங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பல நாட்களாகியும் மரங்களை அப்புறப்படுதாமல் அதே இடத்தில் இருப்பதால் வாகன ஒட்டிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டும், காணாமலும் வாகன ஒட்டிகள் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதனை கருதி விபத்துகள் ஏற்படும் முன் வெட்டப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.