தென்காசி மாவட்டம் சுரண்டையில் தமிழ்நாடு மெர்க்கண்டனல் வங்கி செயல்பட்டு வருகிறது நேற்று வியாழகிழமை இரவு வங்கியை அதிகாரி பூட்டி சென்றுவிட்டார்.
காவலர் மட்டுமே வெளியே இருந்தார். இன்நிலையில் திடீரென்று வங்கியின் மேலாளர் அறையின் உள்ளிருந்து புகை வர ஆரம்பித்தது. இதை அடுத்து காவலாளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வெளிபுற சன்னலை உடைத்து தண்ணீரை பாச்சி தீயை அணைக்க முனைந்தனர்.
பின்னர் அவசர அழைக்கப்பட்ட அதிகாரி வந்து வங்கியை திறந்து கொடுத்தபின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினரின் முதல் விசாரணையில் தெரிந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.