நாகர்கோவில் மாநகராட்சி 5 வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் ரூபாய் 9 லட்சம் செலவில் தார் தளம் அமைக்கும் பணியினையும் 48 வது வார்டில் ₹18 இலட்சம் மதிப்பீட்டில் குளத்தூர் காலனி பகுதியில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணி,
பிரதௌசியா நகர் பகுதியில் கழிவுநீரோடை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணி, பரசுராமன் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினையும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ மகேஷ் தொடங்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.