விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் பால்வளத்துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

sen reporter
0

 கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும்   மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு                           விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் பிஎன்ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் முன்னிலையில் பால்வளத்துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ்  துவக்கி வைத்தார்.  



 தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்  தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் .ரெ.மகேஷ்  முன்னிலையில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்   (17.07.2023) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியினை  பால்வளத் துறை அமைச்சர்.த.மனோ தங்கராஜ்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். தொடர்ந்து அவர் வாழ்த்துரையில்ல பேசும்போது - 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் இயற்கையான சூழலில் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், இடநெருக்கடியை தவிர்க்கும் வகையிலும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். மேலும் விலையில்லா நோட்டு புத்தகம், வண்ண சீருடை, ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேலான திட்டங்களை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கென அறிவித்து அவற்றை சிறப்பாக செய்து வருகிறார்கள். 
 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  மற்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கடந்த 10.07.2023 அன்று தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

 அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெற்று அதில் சுயநிதி அடிப்படையிலான மேல்நிலைப் பாடப்பிரிவு வகுப்புகளில் பயின்ற மாணவ  மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 25 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. கொட்டாரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 110 மாணவர்கள் 121 மாணவிகள் என மொத்தம் 231 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 110 ஆண்கள் மிதிவண்டிகளுக்கான தொகை ரூ.5,39,000/- மற்றும் 121 மாணவிகள் மிதிவண்டிகளுக்கான தொகை ரூ.5,75,960/- ஆக மொத்தம் ரூ.11,14,960 /- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2022-2023 கல்வியாண்டில் 6382 ஆண்கள் மிதிவண்டிகள் மற்றும் 7948 பெண்கள் மிதிவண்டிகள் என மொத்தம் 14,330 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. அவற்றில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில்               1370 ஆண்கள் மற்றும் 1963 பெண்கள் மிதிவண்டிகள், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் 876 ஆண்கள் 1125 பெண்கள் மிதிவண்டிகளும், குளச்சல் தொகுதியில்               1186 ஆண்கள் 1294 மிதிவண்டிகளும், பத்மனாபபுரம் தொகுதியில் 870 ஆண்கள்                     1179 பெண்கள் மிதிவண்டிகளும், விளவங்கோடு தொகுதியில் 1096 ஆண்கள் 1361 பெண்கள் மிதிவண்டிகளும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 975 ஆண்கள் மற்றும் 1026 பெண்கள் மிதிவண்டிகளும் வழங்கப்பட உள்ளது.

2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.42398775/-ம் மதிப்பில் 8193 மாணவர்களுக்கும் ரூ. 42726528/- மதிப்பில் 8559 பெண்களுக்கும் என மொத்தம் ரூ.85125303/- மதிப்பில் 16752 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நூற்றுக்கு 72% என்ற கணக்கில் மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். உங்களுக்குள் ஒரு கொள்கை வைத்துபடியுங்கள். எது தேவையோ அதை தேடிதேடி படியுங்கள் நீட் தேர்வு என்பது தேவையற்ற ஒன்று +2 முடித்து பொது தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின் இன்னொரு தேர்வு ஏன் என்பதே எங்களது கேள்வி நீட் தேர்வில் தோல்வி என்பதால் மரணிப்பது முட்டாள் தனம்இங்கு இருப்பவர்கள் யாரும் எம்.பிபிஎஸ் முடித்தவர்கள் இல்லை ஆனால் உயர்ந்த பதவியில் இருக்கிறோம்.இதை உணர்ந்து கொள்ளுங்கள்இப்போது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது இது நல்ல திட்டம் என்பேன். என  பால்வளத்துறை அமைச்சர் .மனோ தங்கராஜ்  பேசினார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன், .முருகன் கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் .அழகேசன், அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ ஆலோசனை குழு உறுப்பினர் .பாபு, கொட்டாரம் பேரூராட்சித்துணைத் தலைவர்.விமலா மதி, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துறைத்தலைவர் சரவணன், பேரூராட்சி உறுப்பினர் சரோஜா, மாவட்டஇளைஞரணி.அகஸ்தீசன்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top