குமரி மாவட்டம் தேரூரை சேர்ந்தவர் தர்ஷினிபிரியா இளம்பெண் வயது 20 இவரும் நெல்லை மாவட்டம் மௌ காவல் கிணறு பகுதியை சேர்ந்த மரிய ஜெபஸ்டியான் என்ற வாலிபரும் காதலித்துள்ளார்.
இந்த நிலையில் காதலர்கள் சென்னை சேலையூர் ஆலயத்தில் வைத்து நேற்று முன்தினம் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் சென்னைக்கு விரைந்து சென்று போலீஸ் உதவியுடன் பெண்ணை வலுக்கட்டாயமாக காதலனிடம் இருந்து பிரித்து அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.