நீலகிரி மாவட்டம் மார்க்கெட் செல்லும் சாலை சீரமைக்க வேண்டி நெல்லியாளம் நுகர்வோர் சங்கம் கோரிக்கை....
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங் கிராஸ்( மார்க்கெட்) சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாபாரிகள் வந்து செல்லுகின்றனர்.
இந்த பகுதியில் மார்க்கெட் கழிவறை அமைந்துள்ளது இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் சேரும் சகதியமாக காணப்படுகின்றன.
இதனால் இந்த மார்க்கெட் பகுதி வரும் பொது மக்கள் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நடைப்பாதையினை சீர் செய்ய வேண்டும் என நெல்லி யாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.