நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வார்டு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டம் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி அவர்களின் அலுவலகத்தில் வைத்து மாநகர தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது .
இதில் உரையாற்றிய மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் ஜே சி நவீன் குமார் குமரி மாவட்டத்திற்கு சொந்தமாக கட்சி அலுவலகம் இல்லை ஆகவே குமரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் கட்ட மாவட்ட தலைவர் இடத்தை தேர்வு செய்து அதற்காக 301001 ரூபாய் முன் தொகையாக செலுத்தி இடத்தை தேர்வு செய்து உள்ளார்கள் மீதமுள்ள தொகையை நிர்வாகிகளிடம் வசூல் செய்து மிகப் பெரிய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்டி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கட்சி கூட்டத்திற்கு கட்சி போராட்டத்திற்கு வர தவறும் வார்டு தலைவர்கள் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் மூன்று கூட்டத்திற்கு தொடர்ந்து வராமல் இருந்தால் அவர்களை பதவியில் இருந்து நீக்கவும் மாமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த முறை கட்சியில் சின்னம் வழங்கக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வெட்டூர்ணிமடம் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்