திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட சி.எஸ்.ஐ. கௌடி தொடக்க பள்ளியில் இன்று (25.07.2023) கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
உடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் திரு.சுரேந்திரஷா, தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.