மணிப்பூரில் பற்றி எரியும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிஜேபி அரசை கண்டித்து தேனி மாவட்டம் தேவாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட விஜயா உரங்களை முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
மணிப்பூர் மாநிலத்தில் 80 நாட்களுக்கு முன்பு மெய்தி இன மக்களுக்கும் குக்கி இன மலைவாழ் மக்களுக்கும்இடையில் உருவான பிரச்சனை கலவரமாக உருவெடுத்து இன்றுடன் 80 நாட்கள் ஆன நிலையில் மலையில் வாழக்கூடிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தும் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் மலைவாழ் மக்கள் பெரும்பான்மையாக கொல்லப்படுவதும் அவர்களுடைய பெண்பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும் தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் ஒன்றிய அரசு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான அமைதிப் பேச்சு வார்த்தையும் நடத்தாமல் வேடிக்கை பார்ப்பதால் கலவரம் மாநில முழுவதும் பற்றி எரிகிறது.
இரண்டு தரப்பு மக்களும் சுமார் 290 முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அந்த மாநிலத்தில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு மக்கள் நெருக்கடியாக இருக்கிறார்கள். எனவே தனது வாழ்வாதாரத்தை தொலைத்து வாழ வழி இல்லாமல் முகாம்களில் அடக்கி அடைத்து வைக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களினுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது, எனவே ஒரு மாநிலத்தில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத ஒன்றிய அரசை கண்டித்து இன்று 25.07.2023 காலை 11.00 மணியளவில் ஒன்றிய செயலாளர் வீ.பாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இ வி தொ ச தேசிய பொதுக்குழு உறுப்பினர் தோழர் P.கணேசன் அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கி.பெருமாள் அவர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர் Msp ராஜ்குமார், K.தனலட்சுமி மற்றும் உத்தமபாளையம் ஒன்றிய துணை செயலாளர்கள் தோழர் N.ராஜேந்திரன்,E.முத்துலட்சுமி , கிளைச் செயலாளர்கள் கிளைத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.