அவதூறு வழக்கில் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த கனல் கண்ணனை போலீசார் விசாரணை மேற்கொள்ளாமல் நீண்ட நேரம் காக்க வைத்ததால் இந்து முன்னணியினருக்கும் காவல்துறையினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
தமிழ் திரைப்படத்துறையின் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இந்து முண்ணணி ஆதரவாளரான இவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் பேரில் விசாரணைக்காக அவர் நாகர்கோவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
அவர் வந்து நீண்டநேரம் காத்திருந்தும் விசாரணை அதிகாரிகள் அவரைகண்டுகொள்ளாத காரணத்தால் காவல்துறையினருக்கும் கனல்கண்ணன் ஆதரவாளர்
விசாரணைக்கு வந்த கனல் கண்ணனை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பி காவல்துறையினரோடு வாக்குவாதம் மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.