தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு கிளை நூலகத்தை பல நாட்களாக சரியான நேரத்திற்கு திறக்கப்படாமல் இளைஞர்களுக்கும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்வித்தை காட்டி வருகின்றனர். கூடலூரில் கிளை நூலகமானது திறக்கும் நேரமானது அறிவிப்பு பலகையில் ஒன்றும்,ஆனால்,பகல் 12மணிவரையிலும் திறக்கப்படாமலும், தமிழக அரசை ஏமாற்றி வருகின்றனர்.மேலும், நூலகம் திறக்கப்படுவதும் இல்லை,யாரும் வந்து ஆய்வு செய்வதும் இல்லை என பல இளைஞர்கள் புலம்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் தேர்வை எதிர்கொள்ளவும், தங்களது எதிர்கால கனவை நிறைவேற்ற வேண்டும் என நூலகத்திற்கு செல்கின்றனர். ஆனால் அப்படி செல்லும்போது நூலகம் திறக்கப்படாமல் இருப்பதால் இளைஞர்கள் வேதனையுடன் திரும்பி செல்வது வாடிக்கையாவாகவே கூடலூர் பகுதியில் தொடர்கிறது.தேனி மாவட்ட நூலக அலுவலர் இதுகுறித்து ஆய்வு செய்வது இல்லை என கூறிவருவதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நூலக அலுவலர் இருக்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.இந்த செயலானது தேனி மாவட்ட இளைஞர்களின் எதிர்கால கனவை தேனி மாவட்ட நூலக அலுவலரானவர் சீர்குலைக்கும் செயல் என கூடலூர் பொதுமக்களும், இளைஞர்களும் பேசிக்கொள்கின்றனர். இளைஞர்களின் எதிர்கால நலனை கருதி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் இதுகுறித்து தீர விசாரித்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூடலூர் நகர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட இளைஞர்களின் எதிர்கால கனவை சின்னாபின்னமாக்கும் மாவட்ட நூலக அலுவலர்?
August 24, 2023
0