தேனி மாவட்ட நிர்வாகமானது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை ?
August 27, 2023
0
தேனி மாவட்டம் உத்தமபாளையம்- கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் மெரினா காபி ஷாப் உள்ளது.இந்த கடைக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.மேலும்,இந்த கடைக்கு பின்புறம் விவசாய நிலங்களும், வாழைத்தோட்டங்களும் பெரிதும் காணப்படுகிறது. கடையில் பயன்படுத்திய கழிவுப்பொருள்களை பைப்லைன் வழியாக பின்னால் உள்ள விவசாய நிலங்களில் இந்த கடை நிர்வாகமானது வெளிக்கடத்துகிறது. இதனை தொடர்ந்து விவசாய நிலங்களில் நச்சு நீர்கள் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மேலும் வயல் வேலை செய்யும் விவசாயிகளுக்கும், போக்குவரத்து பயணிகளுக்கும் துர்நாற்றம் வீசும் அவலம் தொடர்கிறது. அந்த சாலையை கடக்க வேண்டும் என்றால் மூக்கை மூடி தான் பொதுமக்கள் செல்கின்றனர்.மேலும்,பல அரசுத்துறை அதிகாரிகள் இங்கே வந்து தான் தேநீர் அருந்துவது வாடிக்கையாக உள்ளது. அந்த அதிகாரிகளின் கண்களுக்கும் கூட ஏன் இது புலப்படவில்லை என பொதுமக்களும் விவசாயிகளும் புலம்பல். இதனை கருதி உத்தமபாளையத்தை சுகாதார சீர்கேட்டால் சுடுகாடாக மாற்றும் முன் விவசாய நிலங்களில் கழிவுநீரால் நச்சுத்தன்மைகளையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் *மெரினா ஷாப்* கடையின் மீது தேனி மாவட்ட நிர்வாகமானது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.