சமூக தொண்டாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் !
August 26, 2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.08.2023) நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசு துறையை சேர்ந்த 8பணியாளர்கள் மற்றும் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் 4தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ. மெய்யநாதன், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.