திருப்பூரில் பயங்கர தீ விபத்து பனியன் கம்பெனி எரிந்து நாசம் !
August 28, 2023
0
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள வாமன் எக்ஸ்போர்ட் பனியன் கம்பெனி நிறுவனத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லாமல் தொழிலாளர்கள் மாலை 5 மணி வரை வேலை செய்த நிலையில் ஐந்தரை மணிக்கு மேல் திடீரென கம்பெனியில் ஒரு பக்கம் இருந்து தீ பிடித்ததாகவும் தீ மனமளவென பரவி கம்பெனி முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்த நிலையில் பனியன் கம்பெனி நிர்வாகம் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்பு துறையினர் மின்னல் வேகத்தில் வந்து தீயை அணைக்க போராடினர் ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை ஆகவே வடக்கு தீயணைப்பு நிலைய மற்றும் பல்லடம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் மேலும் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு இரவு 8 மணி வரை போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முன்னதாக சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் வனிதா அவர்கள் தலைமையில் உதவி ஆணையர் நந்தினி, கார்த்திகேயன் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த தீ விபத்தின் காரணமாக பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு போராடி சில மணி நேரங்களில் தீயை அணைத்து மற்ற இடங்களுக்கு தீ பரவமல் தடுத்து நிறுத்தப்பட்டதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். ஏற்கனவே பனியன் தொழில் மோசமான நிலையில் உள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு பனியன் பஜார் , காங்கேயம் ரோட்டில் பனியன் கம்பெனி தீவிபத்து தற்போது பழ வஞ்சிபாளையத்தில் பனியன் கம்பெனி தீ விபத்து என தொடர்ச்சியாக தீ விபத்து நடைபெறுவது மிகவும் வருத்தம் அடைய செய்வதாக பனியன் தொழிலாளர்கள் கூறினர்.