தேனி மாவட்டம் உ. அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை ?
August 25, 2023
0
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட உ.அம்பாசமுத்திரம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலையானது தோண்டப்பட்டு பல நாட்களாகியும் வேலைப்பாடு ஏதும் நடைபெறாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். உ.அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கூறியும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க உ. அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.