மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாமக்கல், சேந்தமங்கலம் சாலை, கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலியார் நகரில்
சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இவ்விழாவில், மாண்புமிகு
வனத்துறை அமைச்சர் மரு. மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பி. இராமலிங்கம், திரு.கு. பொன்னுசாமி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற
உறுப்பினருமான திரு.ஈ.ஆர். ஈஸ்வரன், பிஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி, பெரியசாமி, புலவர் தமிழமுதன்,
தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் இராசேந்திரன், தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார்,
திரு.எஸ்.எம்.மதுரா செந்தில், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை தலைவர் திரு.செ. கொங்குவேள், அறக்கட்டளையின் நிர்வாகிகள், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
