மிலாடி நபி தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு
அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டிருக்கும் என தேனி
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.2023 -ஆம் ஆண்டில் எதிர்வரும் 28.09.2023 அன்று மிலாடி நபி தினம் மற்றும் 02.10.2023 அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் (எப்.எல்.1) உரிமம் பெற்ற பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(யு), எப்.எல்-3(யுயு), மற்றும் எப்.எல்.11 ஆகியவைகள் மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 28.09.2023 -ஆம் தேதி வியாழக்கிழமை மிலாடி நபி தினம் மற்றும் 02.10.2023-ஆம் தேதி திங்கள்கிழமை காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் எப்.எல்-1 உரிமம் பெற்ற பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(யு) மற்றும் எப்.எல்-3(யுயு) ஆகியவைகளை கட்டாயம் மூடப்பட வேண்டும் எனவும், விற்பனைகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிடப்படுகிறது. மேலும், மேற்காணும் நாட்களில் விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகள் மற்றும் உரிமதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.jpg)