தேனியில் சில நாட்களாக மழைபெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்கி வெளியேற வழியில்லாமல் உள்ளது.
அல்லிநகரத்தில் ரேஷன் கடை செல்லும் சாலை, புல்லுக்கட்டுதெரு, போன்ற பகுதிகளிலும் சாலைகளிலுமே மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். அல்லிநகரம் பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகமானது கண்டுகொள்ளாமல் உள்ளதால் பொதுமக்கள் விரக்தி அடைந்து வருகின்றனர்.நகராட்சி துறையினர் அல்லிநகரம் சாலையின் வழியை பலமுறை சென்றாலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல், மழைநீர் தேங்கி நிற்பதை வேடிக்கை பார்த்துவிட்டு செல்வதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். பொதுமக்கள் நலனை கருதி நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அல்லிநகரம் மக்கள் கோரிக்கை.
