தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள்
வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு
உயரிய ஊக்கத்தொகை வழங்கிட ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க.ஸ்டாலின்
அவர்களுக்கு அனைத்து மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு நலச்
சங்கங்கள் சார்பில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில்
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல்
தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய
உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள், கேல்ரத்னா விருது பெற்ற பத்மஸ்ரீ தங்கவேலு மாரியப்பன்,
தயான் சந்து விருது பெற்ற திரு. ரஞ்சித் குமார், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் தலைவர் திரு. நாகராஜ், செயலாளர்
திரு. கிருபாகர ராஜா, பொருளாளர் திரு. விஜய் சாரதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)