விடுதலைக் கழகம் கட்சியின் மற்றும் சீர் மரபினர் நல சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காதில் பூ வைத்துக்கொண்டு மனு கொடுக்க வந்தனர் பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர் இதை அடுத்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது
முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 20 21 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தொட்டிய நாயக்கர் மறவர் குறவர் உள்ளிட்ட 68 சீர் பழங்குடியின சமூகங்களுக்கு டி என் டி என்கிற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார் இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி காதில் பூ வைத்துக்கொண்டு மனு கொடுக்க வந்தோம் இவ்வாறு அவர் கூறினார் இந்த நிகழ்ச்சியில் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவர் நாகராஜன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
