திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில்
பெண்கள் சிறுநீர் கழிக்க பத்து ரூபாய் என கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதற்கு உறுதுணையாக இருந்து செயல்படும் வத்தலகுண்டு பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்துவகை
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காலவரையற்ற மறியல் போராட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.
