நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாவட்ட திமுக செயலாளர் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் முழுமையாக பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் பொறுப்பாளர்கள் நியாயமிக்கப்பட்டு கட்சி தலைமையால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அதில் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்டம் படியூரில் நடக்கிறது இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் சமயங்களில் வாக்குச்சாவடியில் எவ்வாறு பணியாற்றுவது வீடுகள் தோறும் ஆட்சியின் சாதனைகளை எவ்வாறு எடுத்துரைப்பது சமூக வலைத்தள பிரச்சாரம் மற்றும் திண்ணை பிரச்சாரம் குறித்து பேசுகிறார் இந்த கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் பரமத்திவேலூர் திருச்செங்கோடு சட்டசபை தொகுதி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று காலை எட்டு முப்பது மணிக்கு பந்தலில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அடையாள அட்டையுடன் அமர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
.jpg)
