தஞ்சாவூர்மாவட்ட சத்தியம் தொலைக்காட்சி செய்தியாளர் திரு.அலெக்சாண்டர் மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்!!!

sen reporter
0


 சத்தியம் தொலைக்காட்சி தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர் திரு.அலெக்சாண்டர் மறைவு                  சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்.


கடந்த 25 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றியவர்  தூத்துக்குடி மாவட்டம் பாலையாபுரத்தை சேர்ந்த திரு.அலெக்ஸாண்டர்.


 சத்தியம் தொலைக்காட்சியில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர் திரு.அலெக்சாண்டர் (வயது46)  உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (28.09-2023) வியாழக்கிழமை இரவு இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.*

 அவரை இழந்து  வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், ஊடக நண்பர்கள் என அனைவருடனும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்


 சமீப காலங்களில் இளம் வயதிலும் நடுத்தர வயதிலும் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் உடல் நலக்குறைவினால் காலமாவது பெரும் கவலையைத் தருகிறது.குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் நல பரிசோதனைகள் மேற்கொள்வதும், சிகிச்சை எடுத்துக் கொள்வதும் இது போன்ற மரனங்களைத் தவிர்க்க உதவும்.


 மூத்த ஊடகவியலாளர் திரு.அலெக்சாண்டர் மறைவுக்கு உடனடியாக இரங்கல் செய்தி வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சரை நெகிழ்வுடன் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம்.* 


ஆழ்ந்த  துயரங்களுடன்

பாரதிதமிழன்

இணைச் செயலாளர்

 சென்னை பத்திரிகையாளர் மன்றம்

சென்னை

29-09-2023

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top