நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் முதியவர்களை காப்பகத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய மேயர் மகேஷ் பேருந்து நிலையத்தில் எரியாத விளக்குகளையும் உடனடியாக மாற்றிட உத்தரவிட்டார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பொறுப்பேற்ற பின் ஒவ்வொரு வார்டுகளாக நேரில் சென்று ஆய்வு செய்து தீர்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று காலை அண்ணா பேரூந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் பேரூந்து நிலையத்தில் ஆதரவின்றி தஞ்சம் அடைந்திருக்கும் முதியவர்களை சந்தித்து விசாரித்தார். பின்னர் அவர்களை உரிய காப்பகத்தில் சேர்த்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து போக்குவரத்து துறை சமய குறிப்பாளர் அறை மற்றும் அவர்களது கழிப்பறையை சோதணை செய்த அவர் கழிவறையை சுத்தமாக வைத்திருக்க அதிகாரி ஜேரோலினிடம் அறிவுத்தினார். பின்னர் புதியதாக கட்டப்பட்டுள்ள கழிவறையை பார்வையிட்ட அவர் விரைந்து திறக்க அதிகாரியை கேட்டு கொண்டார். தொடர்ந்து வார்டு உறுப்பினர் ரோசிட்டா திருமால் கோரிக்கை பேரில் அண்ணா பேருந்து நிலைய நடைபாதை முடிவு பகுதி சற்று உயரமாக இருப்பதால் அதில் படிக்கட்டுகள் கட்ட உத்தரவு பிறப்பித்தார். பேரூந்து நிலையத்தில் தேவையற்று இருக்கும் பயணிகள் காத்திருக்கும் அறையை மாற்றிட உத்தரவிட்டதோடு பேரூந்து நிலையத்தில் செறுப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் படிக்கட்டு கீழ் ஆக்கிரமித்து வீடு போல ஆக்கி இருப்பதை கண்டு அதிர்ந்து அதை உடனடியாக மாற்றிட ஆணை பிறப்பித்தார். பேரூந்து நிலையத்தின் உள் பகுதியில் எரியாத மின் விளக்குகளை மாற்றிட கேட்டுகொண்டார். பேரூந்து நிலையத்தில் சில கடைகளில் சட்டர் இன்றி இருப்பதை பார்த்த அவர். உடனடியாக சட்டர் போட அதிகாரிகளை கேட்டு கொண்டதோடு கடைக்காரர்கள் இனி சட்டரை அகற்றினால் கடை உரிமத்தை ரத்து செய்ய ஆலோசணை வழங்கினார். தொடர்ந்து கோட்டார் மற்றும் செட்டிகுளம் சந்திப்பில் பாதாளசாக்கடை திட்டத்தில் பள்ளமாகி கிடக்கும் இடங்களை ஆய்வு செய்ததோடு உடனடியாக சீரமைக்க யோசணை வழங்கினார். இன்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மக்கள் நல அதிகாரி ராம்குமார் சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை மாநகர மண்டல தலைவர் ஜவகர் மாமன்ற உறுப்பினர் ரோசிட்டா திருமால் மாநகர திமுக துணை செயலாளர் வேல்முருகன், பகுதி பொறுப்பாளர் துரை, கிருஷ்ண மூர்த்தி ,தொண்டரணி ராஜன் வட்ட செயலாளர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)