தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் புகார்!!!
10/08/2023
0
மார்க்கையன்கோட்டை பேரூராட்சி 12வது வார்டில் மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் நோய்தொற்று அச்சதுடன் மக்கள் உள்ளனர். மார்க்கையன்கோட்டை பேரூராட்சியானது எல்லப்பட்டி மற்றும் முத்துச்சாமிபுரம் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய நிலையில் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி துறையினர் சுற்றுவட்டாரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துச்சாமிபுரம் செல்லும் சாலையில் கொட்டி குவித்து வருவதால் சுகாதார சீர்கேடு உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், குவிக்கப்படும் குப்பைகளில் தீவைப்பதால் கிராமங்கள்தோறும் புகை மண்டலமாக காட்சி தருகிறது.விவசாய நிலங்கள் அதிகமாக இப்பகுதியில் காணப்படுவதால விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக புகார்.பொதுமக்களின் குறைகளை கேட்டு மார்க்ககையன்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
