தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் உத்தரவுப்படி பெரியகுளம் தீயணைப்பு துறையினர் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியானது பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது.இந்த நிகழ்வில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்சிசி அலுவலர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க. பழனி அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வானது நடைபெற்றது.

