திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சி பெருமாநல்லூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் வலசப்பாளையம் பிரிவு பனங்காடு அருகே பெருமாநல்லூர் ஊராட்சி மூலம் குப்பையைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குப்பையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது மிகவும் புகை மூட்டமாக உள்ளது ரோட்டில் எதிரெதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டமாக உள்ளது பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு எடுத்துச் சொல்லியும் ரோட்டோரம் குப்பை கொட்டி தீ வைத்து விடுகிறார்கள். மெயின் ரோட்டில் புகை மூட்டமாக இருப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும்,மூச்சுத் திணறல், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. ஊராட்சி
நிர்வாகம் எரிந்து கொண்டிருக்கும் தீயை அனைத்து புகை மூட்டத்தில் இருந்து பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கின்றார்கள்
