!
இதில் சிக்கிய முதியவர் ஒருவர் பலியானார்.இது குறித்த கூறப்படுவதாவது.
தாழக்குடி கிராமம் மீனமங்கலம் காலணி கடைசி தெருவில் வசித்து வருபவர் வேலப்பன் . இவருக்கு பரமாயி என்ற மனைவியும் மகேஷ் என்ற மகனும் உண்டு. இவர் தனக்கு சொந்தமான ஓட்டு வீடு ஒன்றில் வசித்துவந்தார். இன்று பெய்த கனமழையில் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டினுள் இருந்த வேலப்பன் என்பவர் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்தார். தகவல் அறிந்ததும் மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ. மகேஷ் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்தோடு அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். நிகழ்வில் தாழக்குடி பேரூராட்சி தலைவர் சிவகுமார் கவுண்சிலர் முத்துலெட்சுமி , சங்கர் மற்றும் கழகத்தினர் உடன் இருந்தனர்.
