கோதையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் மூழ்கி போய் உள்ளது .இதனால் ஏழு மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழையில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் முதியோர் ஒருவரும் பலியாகி உள்ளார்.
இது குறித்த செய்தியாவது;
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றர் 1 ,2 ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி சிற்றார்1.ல் 13.71 கனஅடியும் சிற்றாறு 2.ல் அணைகளில 13.81 கனஅடியும் பேச்சிப்பாறை அணையில் 29.69 கன அடியும் பெருஞ்சானி அணையில் 55 கன அடியும் பொதிகை அணையில் 9.30 கனஅடியும் மாம்பழத்தாறு அணையில் 11.15 கனஅடியும் நாகர்கோவில் மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் 4.60:கனஅடி தண்ணீரும் உள்ளது. இதில் பேச்சிப்பாறை அணைக்கு 2127 கன அடி தண்ணீர் வருத்துள்ளது பெருஞ்சாணி அணைக்கு 19 39 கன அடி தண்ணீரும் . முக்கடல்அணைக்கு 11.2 கன அடி தண்ணீரும் வருத்து உள்ளது. கோதையாற்றில் மழைநீர் அதிக வருவதை அடுத்து தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்கிறது .இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாலும் கோதையாற்றில் தண்ணீர் வறுத்து அதிகமாக உள்ளதால் ஏழு மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தை மாவட்ட உயர் அதிகாரிகள் திருவட்டாறு ஒன்றிய சேர்மன் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதேபோல் கீரிப்பாறை காட்டுப்புதூர் பகுதியில் கன மழை பெய்தால் காளிகேஷம் ஆற்றில் தண்ணீர் வறுத்து அதிகரித்துள்ளது பழைய ஆற்றில் மழை தண்ணீர் அதிகமாக வருவதால் சுசீந்திரம் பாலத்தை தொட்டு தண்ணீர் செல்கிறது. பிள்ளை பெற்றான் அணை நிரம்பி வழிகிறது. நாகர்கோவில் மாநகரில் கன மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேயர் மகேஷ் கமிஷனர் ஆனந்த் மோகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர் செட்டிகுளம் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையை பார்வையிட்ட அவர்கள் சாலையை சீரமைக்க உயர்அதிகாரிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் . மேலும் பெருவிளை பகுதியில் மரம் ஒன்று சாய்ந்து வீட்டு சுவர் செய்தமடைந்ததைஅடுத்து நேரில் பார்வையிட்ட மேயர் மகேஷ் நகராட்சி பணியாளர் மூலம் மரத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இரண்டு நாளாக பெய்து வரும் கனமழையில் கன்னியாகுமரி மாவட்டம் சற்று குலுங்கி தான் போய் உள்ளது .ஆனால் மேயர் மகேஷ் நடவடிக்கையினால் எப்பொழுதும் தண்ணீர் தேங்கும் செட்டிகுளம் கோட்டார் பகுதி பிரச்சனையின்றி இருந்தது பாராட்டத்தக்கது .இந்தப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புக்கள்அகற்றப்பட்டு மழை நீர் ஓடை சீரமைக்கப்பட்டதால் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கும் இந்த பகுதி பளிச்சென்று இருந்தது. குளச்சல் பகுதியில் பெய்த கனமழையால் மசூதி
ஒன்றில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை அப்புறப்படுத்த நகராட்சி தலைவர் நசீர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கனமழையின் காரணமாக பெரும்பான்மையாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. செங்கல் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளது .
.jpg)
.jpg)