ஆவடி மாநகராட்சியில் நகர அமைப்பு பிரிவில் கோப்புகள் தேக்கம் மக்கள் அவதி!!!

sen reporter
0


 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால் நகரமைப்பு அலுவலராக பாஸ்கர் என்பவர் நியமனம் செய்யப்பட்டார் இவர் பணி செய்ய முடியாததால் இதற்கு முன்னதாகவே பணி நிறைவு பெறுவதற்காக கடிதம் கொடுத்துள்ளார் இருப்பினும் இந்த கடிதத்தை  பொருட்படுத்தாமல் இவரை ஆவடி மாநகராட்சியில் பணியில் அமர்த்தினர் இதனால் மனவேதனை அடைந்த பாஸ்கர் அவர்கள் எந்த கோப்புக்களிலும் கையெழுத்து போடாமலே இருந்தார் இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னால் புதியதாக சாப்ட்வேர் தமிழ்நாடு முழுவதும் மாற்றப்பட்டது ஆவடியிலும் அதேபோல் சாப்வேர் ஆவடியிலும் மாற்றம் செய்தன் இதனால் லைசன்ஸ் சர்வேயர்கள் எப்படி இதனை பயன்படுத்துவது என்று தெரியாமல் ஒரு மாதமாக குழம்பு வருகின்றனர் இதனால் இவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் இவர்களை அழைத்து எப்படி இந்த புதிய சாப்ட்வேரை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குவதாக கூறி இருந்தனர் ஆனால் இதனால் வரை இதுவரை கூட்டமும் கூட்டவில்லை ஆலோசனை வழங்கப்படவில்லை இதனால் பொதுமக்களின் கோப்புகள் தேங்கி நிற்கிறது இதனால் பொதுமக்களும் சமூக ஆர்வலரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள் உடனடியாக ஆவடி மாநகராட்சியில் லைசன்ஸ் சர்வேயர்களை அழைத்து கூட்டம் கூட்டி இவர்களுக்கு புதிய சாப்ட்வேரில் எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்பது இவர்களுடைய வேண்டுதலாக உள்ளது கோப்புகள் தேக்கமடைந்துள்ளதால் மாநகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது இதனால் உடனடியாக சரி செய்து கோப்புகளை சரி பார்த்து அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் இது ஒரு புறம் இருந்தாலும் ஆவடி மாநகராட்சியில் நகரமைப்பு அலுவலர் மட்டுமே இருக்கிறார் நகர மைப்பு ஆய்வாளர்கள் ஒருவர் கூட இல்லாததால் மிகவும் சிரமமாக இருக்கிறது என்று நகரமைப்பு அலுவலர் குறை கூறி வருகிறார் உடனடியாக புதிய ஆள்களை பணியில் அமர்த்தி விரைவாக பணிகளை செய்ய வேண்டும் என்பதும் சமூக ஆரவலர்கள் கோரிக்கையாக உள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top